ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம்: அடுத்த வாரம் தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை?

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளபட 7 மீது சிபிஐ கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் சிபிஐ வாக்குமூலங்கள் வாங்கியது. மேலும், இது குறித்து தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து மீண்டும் ஆவணங்களை வாங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
தற்போது தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தேவைபப்ட்டால் இது தொடர்பாக மேலும் சில முன்னாள் தொலைத்தொடபுத் துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று கூறப்படுகின்றது.
விசாரணை குறித்து தயாநிதி மாறனுக்கு சிபிஐ விரைவில் சம்மன் அனுப்பவிருக்கிறது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் குறித்த விசாரணை தொடர்பாக மொரீஷியஸ் மற்றும் மலேசியாவில் உள்ள நிறுவனங்களின் விவரங்களை அனுப்பக் கோரி சிபிஐ அந்நாடுகளின் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பவிருக்கிறது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் நடைபெற்றபோது மொரீஷியஸ் நாட்டு நிறுவனம் ஒன்று மலேசிய நிறுவனம் மூலம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பணம் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications