இதுதாண்டா போலீஸ்...லஞ்சம் வாங்கி ரசீதும் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'!
சென்னை: சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரூ.1500 லஞ்சம் வாங்கியுள்ளார். வாங்கிய லஞ்சத்துக்கு ரசீது கொடுத்ததால் சிக்கிய அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சட்டக்கல்லூரி காவல் நிலையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜோதிலட்சுமி. டான்பாஸ்கோவின் அழியாத கை சென்னை மக்களின் பார்வைக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் ஜோதிலட்சுமியும் ஈடுபட்டு வந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக அவர் ரூ.1,500 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. மேலும் தான் வாங்கிய லஞ்சப் பணத்திற்காக கையெழுத்து போட்டு ரசீது கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உதவி கமிஷனர் முரளி நடத்திய விசாரணையில் ஜோதிலட்சுமி ரசீது வழங்கி ரூ.1,500 லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து இணை கமிஷனர் செந்தாமரைக் கண்ணன் நேற்று ஜோதிலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஜோதிலட்சுமி பெற்ற லஞ்சப் பணத்தில் பங்கு கிடைக்காத கோபத்தில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொடுத்த புகாரில் தான் அவர் சிக்கியதாகக் கூறப்படுகின்றது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications