நேரு குடும்ப சிலைகளையும் துணியைப் போட்டு மூட வேண்டியதுதானே?-பகுஜன் சமாஜ் கேள்வி
லக்னோ: உ.பி.யில் உள்ள முதல்வர் மாயாவதியின் சிலைகளை துணியைப் போட்டு மூடச் சொல்லும் தேர்தல் ஆணையம் நேரு குடும்பத்தினரின் சிலைகளையும் மூடச்சொல்லுமா. அதேபோல சமாஜ்வாடிக் கட்சியின் சின்னம் என்பதால் நாட்டில் யாருமே சைக்கிள் ஓட்டக் கூடாது என்று சொல்லுமா என்று பகுஜன் சமாஜ் கட்சி கேட்டுள்ளது.
கட்சி சின்னத்துடன் மாயாவதியின் சிலைகள் இருப்பதால் அது பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பதால் அவற்றை மூடுமாறு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதை மாயாவதி கடுமையாக கண்டித்துள்ளார். இது தலித் விரோதச் செயல் என்று அவர் வர்ணித்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு சில கேள்விகளை பகுஜன் சமாஜ் கட்சி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் எஸ்.சி.மிஷ்ரா கூறுகையில்,
காந்தி மற்றும் நேரு குடும்பத்தினரின் சிலைகள் அனைத்தையும் இதுபோல மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடுமா?.
சைக்கிள் கூட ஒரு தேர்தல் சின்னம்தான். அப்படியானால், சாலைகளில் சைக்கிள்களில் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிடுமா என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications