டெல்லியில் இன்டர்வியூக்கு வந்த திருமணமான பெண் பலாத்காரம்- இருவருக்கு வலை
டெல்லி: டெல்லியில் வேலைக்கான நேர்காணலின்போது 21 வயது திருமணமான பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள லோனி ரோடைச் சேர்ந்தவர் 21 வயதான தீபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமானவர். அவர் கடந்த 6ம் தேதி அன்று நொய்டாவிற்கு வேலைக்கான நேர்காணலில் கலந்து கொள்வதற்காக தனது நாத்தனாருடன் சென்றார். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் தீபா மட்டும் நேர்காணல் நடக்கும் அறைக்குள் சென்றார்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் தீபா வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது நாத்தனார் கூச்சலிட்டார். பிறகு தீபாவுடன் அந்த இடத்தைவிட்டு தப்பித்து டெல்லிக்கு சென்றார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து ஷகர்பூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர். அதில் வேலைக்கான நேர்காணல் என்ற பெயரில் தீபா சீரழிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து போலீசார் தீபாவை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் தீபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான இடமில்லை என்ற கருத்து உள்ளது. இந்நிலையில் தற்போது நடந்துள்ள சம்பவம் அதை உறுதிபடுத்தியுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications