16ம் தேதி வரை சுக்ராம் உள்பட 3 பேருக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Sukh Ram
டெல்லி: கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொலைத்தொடர்புத் துறை ஊழலில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம் உள்பட 3 பேருக்கு வரும் 16ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் நடந்த தொலைத்தொடர்புத் துறை ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம், தொலை தொடர்புத் துறை முன்னாள் அதிகாரி ருனு கோஷ், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமராவ் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி அந்த 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 பேரையும் உடனடியாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறை செல்ல வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்று ருனு கோஷ் மற்றும் ராமராவ் ஆகியோர் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் சுக்ராம் கோமாவில் இருப்பதாகஅவரது வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார். அதை மருத்துவமனை மறுத்தது. இந்நிலையில் கோமாவில் இருந்ததாகக் கூறப்பட்ட சுக்ராம் கடந்த 7ம் தேதி சரணடைந்தார். உடனடியாக அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கி்ல் தண்டனை பெற்றுள்ள 3 பேரும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனுக்களை ஏற்று அம்மூவருக்கும் வரும் 16ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நரசிம்ம ராவ் ஆட்சியில் கடந்த 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் 1996ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி வரை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் சுக் ராம். கடந்த 1997ம் ஆண்டு மார்ச் மாதம் சுக் ராம், மற்றும் கோஷ் ஆகியோர் ராமா ராவுடன் சேர்ந்து சதி செய்ததாகக் குற்றம்சாட்டி சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

முன்னதாக கடந்த 1996ம் ஆண்டு பல்வேறு வழக்குகளில் சிக்கிய சுக் ராமின் வீட்டில் இருந்து ரூ.3.6 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+