அன்னா இல்லாமல் கூடி ஆலோசனை நடத்திய ஹஸாரே குழு

அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று சமீபத்தில்தான் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்திற்கு அன்னா வர மாட்டார் என்று கிரண் பேடி தெரிவித்திருந்தார். நான் சொல்லும் யோசனையைக் கேட்டால் அன்னா குழுவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மீண்டும் உயிர் பெறும் என்று சில யோசனைகளை சந்தோஷ் ஹெக்டே கூறியிருந்தார். இப்படி குழு உறுப்பினர்கள் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்திருந்தனர்.
மறுபக்கம், அன்னா ஹஸாரே உடல் நலம் பாதிக்கப்பட்டு புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்குப் போய் விட்டார்.
இந்தப் பின்னணியில்தான் இன்று அன்னா குழு கூடி ஆலோசித்தது. அடுத்து என்ன செய்வது என்று இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வலுவான லோக்பால் மசோதாவைக் கோரி தான் நடத்தி வந்த போராட்டங்களை அன்னா ஹஸாரே கடந்த மாதம் கைவிட்ட பின்னர் நடந்துள்ள முதல் கூட்டம் இது என்பதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், கிரண் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications