திமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்-காஞ்சியில் கருணாநிதி, ஈரோட்டில் குஷ்பு!
சென்னை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் வரும் 25ம் தேதி வீரவணக்க நாம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சி புரத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார்.
இது தொடர்பாக, திமுக மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாய்த்தமிழ் காக்க இன்னுயிர் ஈந்த லட்சிய வீரர்களின் தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்திடும் நாளே ஜனவரி 25. 74 வருடங்களாக நடைபெற்று வருகின்ற மொழிப் போர்; பெரியார், அண்ணா, கருணாநிதி, தமிழ்ச் சான்றோர்கம், ஆன்றோர்கம் இனமான உணர்வாளர்களால் நடத்தப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உயிர்த் தியாகங்களை உம்ளடக்கிய வீர வரலாற்றுக்கு சொந்தமானது. இந்த ஆண்டு வீரவணக்க நாம் பொதுக்கூட்டங்கம் தமிழகம் முழுவதும் ஜனவரி 25ம் தேதி நடைபெறுகிறது.
முக்கிய தலைவர்கள் பேச்சு
காஞ்சீபுரத்தில் நடைபெறும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார். பொன்னேரியில் பொதுச் செயலாளர் க.அன்பழகனும், கிருஷ்ணகிரியில் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பேசுகின்றனர். மதுரையில் தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியும், ஈரோடு நகரில் நடிகை குஷ்புவும் பேச உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications