மதுரையில் சூதாட்டம்: 2 எஸ்.ஐ.க்கள் உள்பட 7 போலீசார் சஸ்பெண்ட்: கமிஷனர் கண்ணப்பன் அதிரடி
மதுரை: மதுரையில் பணம் வைத்து சூதாடிய 2 எஸ்.ஐ.க்கள் உள்பட 7 போலீசாரை கமிஷனர் கண்ணப்பன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட எஸ்.பி. அஸ்ராகார்க்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சின்னபாண்டி தலைமையிலான போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு அறையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்களில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். மீதி 9 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கூத்த பெருமாள், திலகர்திடல் சிறப்பு எஸ்.ஐ. கருப்பையா, போக்குவரத்து ஏட்டு பாலசுப்பிரமணியன், எஸ்.எஸ். காலனி ஏட்டு பாலமுருகன் மற்றும் வேலு, கார் டிரைவர் ஜேம்ஸ் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் தப்பி ஓடியவர்கள் தனுஷ், அசோக், ரவி என்பது தெரிய வந்தது.
பணம் வைத்து சூதாடிய போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து 2 எஸ்ஐக்கள் உள்பட 7 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து மதுரை கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications