குளிரால் குழந்தைகள் இறப்பதை அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றம் கண்டனம்

வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிருக்கு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிருக்கு இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் இமாசல பிரதேசத்தின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சிம்லா, கின்னார், சம்பா போன்ற மலைவாசஸ்தலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். காஷ்மீரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியும், பஞ்சாப், உத்தரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடில்லாத மக்களுக்கு பாதுகாப்பு
இதனிடையே கடும் குளிரால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடில்லாதவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு மாநில அரசுகள் வசதி செய்து தரவேண்டும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை எந்த மாநில அரசும் செயல்படுத்தவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர், குளிர்காலத்தில் மக்கள் தலைக்குமேல் கூரை இல்லாமல் உறங்கும் நிலை உள்ளத்தை உருக்குவதாக உள்ளதாக தெரிவித்தனர். குளிரால் குழந்தைகள் இறப்பதை அனுமதிக்ககூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இரவு தங்கும் விடுதிகளில் குடிநீர், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனி கழிப்பிடங்கள், படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள் இந்த மாநிலங்கள் வரும் சனிக்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications