அனுமதியின்றி இயங்கிய 20 சாயப்பட்டறைகள் மூடல்- மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
நாமக்கல்: குமாரபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய 20 சாயப்பட்டறைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இயங்க தடைவிதித்து சீல் வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றது. இதில் பல சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல் கழிவுநீரை நேரிடையாக காவிரி ஆற்றில் கலந்து வருகின்றது.
இதனை உடனே தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுக் கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பட்டது. இதனையடுத்து உடனடி நடவடிக்கையில் இறங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 20 சாயப்பட்டறைகளுக்கு தடை விதித்து சீல் வைத்தனர்.
கரூரில் சாயப்பட்டறை பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் மரணமடைந்தனர். இதேபோல குமாரபாளையத்தில் சம்பவத்தால் தங்கள் பதவி இழக்க நேரிடும் என்ற பயத்தில் தான் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக, அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications