எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: ஜெயலலிதாவிடம் ரூ.4.64 கோடி கட்சி வளர்ச்சி நிதி வழங்கிய அமைச்சர்கள்

தலைமைக் கழகத்துக்கு வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த அவர், பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மாநில மீனவர் அணி செயலாளர் கலைமணி பெற்றுக் கொண்டார். நிர்வாகிகளுக்கு இனிப்பும் வழங்கினார்.
தொடர்ந்து நடந்த விழாவில், 'வீடியோ கான்பரசிங்' மூலம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிதி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், பழனியப்பன் ஆகியோர் தலா ரூ. 1 கோடியே 6 லட்சம் வழங்கினர். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் தலா ரூ. 1 கோடியும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை செயலாளருமான ரவீந்திரன் ரூ. 52 லட்சமும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர்கள் சுலோசனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச். பாண்டியன். அமைச்சர்கள், அதிமுக எம்.பிக்கள் பாலகங்கா, சென்னை மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், நடிகர் ராமராஜன், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமைக் கழகம் கொடிகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வழி நெடுக பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
அமைச்சர்கள் மரியாதை:
அதே போல எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications