மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 10 பேர் கும்பல் பெரும் தாக்குதல்-மேசை, நாற்காலிகள் உடைந்தன
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு தடுப்புச் சுவர் கட்ட டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த டெண்டர்களைத் திறக்கும் பணி இன்று பிற்பகலில் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில் திடீரென பத்து பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்தது. உள்ளே நுழைந்த அவர்கள் எதிரில் தென்பட்ட அலுவலகப் பொருட்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இதில் மேசைகள், நாற்காலிகள், கண்ணாடிகள் உடைந்தன.
ஏலதாரர்கள் 2 பேர் காயமடைந்தனர். ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. பின்னர் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
படம்: மனோகர் ராஜ்












Click it and Unblock the Notifications