சுதந்திரப் போராட்ட வீரர் ஜீவானந்தம் நினைவு நாள்: புதுவை முதல்வர், தலைவர்கள் மரியாதை
புதுச்சேரி: சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவருமான ஜீவானந்தத்தின் 49வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுள் ஒருவருமான ஜீவானந்தத்தின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி காமராஜ் சாலையில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு முதல்வர் ரங்கசாமி், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் விசுவநாதன், தேசிய கவுன்சில் உறுப்பினர் கலைநாதன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிவ வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று புதுவை கடலூர் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஜீவானந்தத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது தவிர புதுச்சேரி, காரைக்கால் உள்பட பல்வேறு பகுதிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications