கரைகிறது 'கேஸ்'-கவலையில் இல்லத்தரசிகள்: 'இன்டக்ஷன்' ஸ்டவ்களுக்கு திடீர் மவுசு!

சமீப காலமாக கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது. குறிப்பாக கடந்த 3 வருடங்களாகவே இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் சிலிண்டர் தேவை என்று போன் செய்தால் போதும் அடுத்த நாளே கொண்டு வந்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. குறைந்தது ஒரு மாதமாகிறது. பல இடங்களில் அதையும் தாண்டி 45 நாட்கள் வரைக்கும் இழுத்து விடுகிறார்கள்.
கேட்டால், பற்றாக்குறை நிலவுகிறது, லாரி ஸ்டிரைக் என்று ஏதாவது ஒரு காரணத்தைப் பதிலாக தருகிறார்கள். தற்போதும் கூட எல்பிஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நடந்து வருவதால், கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஸ்டிரைக் தொடங்குவதற்கு முன்பு புக் செய்தவர்களுக்கு சிலிண்டர் கிடைக்கவே 30 நாட்கள் வரை ஆகும் என்ற நிலையில் தற்போது அது மேலும் தள்ளிப் போகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதேசமயம், புதிதாக புக் செய்தவர்களுக்கு 2 மாதம் கூட ஆகலாம் என்ற அவல நிலை.
அனைத்து சிலிண்டர் நிரப்பும் மையங்களிலும், எரிவாயு காலியாகி விட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களுக்கு, தினமும், 20 லட்சம் சிலிண்டர்களுக்கு, டேங்கர் லாரிகளில் எரிவாயு வரும். ஆனால், ஏழாவது நாளாக போராட்டம் தொடர்வதால், 1.40 கோடி சிலிண்டர்களுக்கான எரிவாயு வரவில்லை.
நேற்று வரை தமிழகம் முழுவதும் கிட்டதக்தட்ட 30 லட்சம் சிலிண்டர்களுக்கு முன்பதிவாகியுள்ளதாம். ஆனால் எப்போது சிலிண்டர் தருவார்கள் என்பது தெரியவில்லை.
நாளை முதல் தமிழகத்தில் சிலிண்டர் விநியோகம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி மக்களின் வயிற்றில் குறிப்பாக இல்லதரசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்னும் 2 நாளில் முழுமையாக கேஸ் சிலிண்டர்கள் நின்று போகும் என்றும் கூறுகிறார்கள்.
இப்படி அடிக்கடி சிலிண்டர் பிரச்சினை வெடித்து வருவதால் மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதனால் இன்டக்ஷன் ஸ்டவ் எனப்படும் எலக்ட்ரிக் ஸ்டவ்கள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. அதை வாங்கும் மக்கள் அதிகரித்து வருவதாக இன்டக்ஷன் ஸ்டவ் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர்.
எதை எதையோ இலவசமாக தரும் அரசியல் கட்சிகள் இன்டக்ஷன் ஸ்டவ்வை இலவசமாக கொடுத்தால் அடுத்த எலக்ஷனில் அந்தக் கட்சிக்குத்தான் இல்லத்தரசிகள் வாக்களிப்பார்கள் என்று அடித்துச் சொல்லலாம்.அந்த அளவுக்கு 'கேஸ்' பிரச்சினை பெரிதாக உள்ளது தமிழகத்தில்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications