கேரளாவில் பலியான சாந்தவேலு குடும்பத்திற்கு நிவாரணம் தர வைகோ கோரிக்கை
சென்னை: சபரிமலையில் பலியான ஐயப்ப பக்தர் சாந்தவேலின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது,
கடந்த 9ம் தேதி கேரளாவில் உள்ள பம்பாவில் ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்த சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தவேல் மீது கேரளத்தினர் கொதிக்கும் சுடுநீரை ஊற்றினர் இதனால் அவர் உடல் முழுவதும் வெந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு, உயிரிழந்தார். ஆனால் நடந்த சம்பவத்தை மூடி மறைத்து பொய்யான அறிக்கையைக் கேரள முதல்வர் அலுவலம் வெளியிட்டுள்ளது.
எனவே சாந்தவேலின் கொலைக்கு காரணமானவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். பரிதாபகரமாக உயரிழந்த சாந்தவேலின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications