பேச்சுவார்த்தை தோல்வி- சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்கிறது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் 26வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் 23ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9ம் தேதி சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நெல்லை ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
நேற்றுமுன்தினம் பயணியர் விடுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் அமைச்சர் செந்தூர் பாண்டியன் நடத்திய பேச்சு வார்த்தையிலும் தகுந்த தீர்வு காண முடியவில்லை. இதனால் நேற்று 25வது நாளாக விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இன்று 26வது நாளாக ஸ்டிரைக் தொடர்கிறது.
விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பாடப்பிள்ளையார் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராததை கண்டித்தும், அரசின கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பாலபாரதி எம்.எல்.ஏ. தலைமையில் சிஐடியூ மாவட்ட செயலாளர் மோகன் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலையில் வரும் 23ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications