For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர், விழுப்புரம் கலெக்டர்கள் உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு இடவமாற்றம் செய்துள்ளது.இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக மீன்வளத்துறை இயக்குநர் ராஜேந்திர ரத்னு, கடலூர் மாவட்ட கலெக்டராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாவட்ட கலெக்டராக இருந்த அமுதவல்லி, நகராட்சி நிர்வாகத் துறை துணைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் கலெக்டர் மணிமேகலை, கூட்டுறவு, உணவுத்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் தொழில் வெடிமருந்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சம்பத், விழுப்புரம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன், நில அளவை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

English summary
The State government has ordered the transfers of the 6 IAS officers. Rajendra Ratnoo IAS, Director of Fisheries and Managing Director, Tamil Nadu Fisheries Development Corporation Ltd. has been transferred and posted as Collector, Cuddalore district, in the place of V. Amuthavalli IAS, transferred and posted as Deputy Secretary to Government, Municipal Administration and Water Supply Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X