மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனை அலட்சியம்: 20 சிசுக்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு
மால்டா: மேற்குவங்க மாநிலம் மால்டா அரசு மருத்துவமனையில் மேலும் 6 சிசுக்கள் உயிரிழந்துள்ளன. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தினால் அங்கு இதுவரை உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 6 குழந்தைகள் உயிரிழந்தன. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என்று குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த மருத்துவமனையில் மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைத்துள்ள குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது. மருத்துவமனை ஊழியர்களிடமும், பெற்றோரிடமும் இந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட குழந்தைகளின் அடுத்தடுத்த மரணம் தொடர்பாக, அரசிடம் அறிக்கை அளிக்கப் போவதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 20 நாட்களில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications