டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களிடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த செல்லமுத்து மற்றும் 14 உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நெருக்குதலைத் தொடர்ந்து செல்லமுத்து பதவி விலகினார். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களான லட்சுமணன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இந்த விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தங்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரிக்க தடை கோரி அதில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு வகை செய்யும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மனுதாரர்களின் மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications