அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், இந்து ராமைத் தண்டியுங்கள்-ஜெ. வழக்கு

இதுதொடர்பாக சென்னை பெருநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜெகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
முதல்வர் ஜெயலலிதா, சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் மதிக்கப்படக்கூடியவராக இருக்கிறார். இதனால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து அவரை ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பு உள்ளது. இந்தநிலையில், முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி 7-1-2012 தேதியிட்ட நக்கீரன்' இதழில் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டது.
அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதுபோல, ஒருநாளும் எம்.ஜி.ஆர் மாட்டுக் கறி சாப்பிடவில்லை. முதல்வர் ஜெயலலிதாவும் ஒருபோதும் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை. உண்மை இப்படி இருக்கையில், முதல்வர் மாட்டுக் கறியை சமைத்து பரிமாறினார் என்று மிகவும் அவதூறாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். உள்நோக்கத்துடன், முதல்வரின் நன்மதிப்பை குறைக்கும் வகையில் பொய் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 499, 500, 501-வது பிரிவுகளின்படி, மேற்படி அவதூறு செய்தி வெளியிட்டது தண்டனைக்குரிய குற்றமாகும். உண்மை இல்லை என்று தெரிந்தும் அவதூறு செய்தி வெளியிட்ட குற்றத்திற்காக நக்கீரன் ஆசிரியர், இணை ஆசிரியர், நிருபர் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல இந்து ஆசிரியர் ராம், நிருபர் கோலப்பன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இன்னொரு அவதூறு வழக்கில்,
முதல்வர் ஜெயலலிதா பற்றி நக்கீரன்' இதழில் வெளியான செய்தி சரியா, தவறா என்று தீர விசாரிக்காமல், வேண்டுமென்றே இந்து' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி செய்தி எழுதும்போது அந்த செய்தி சரியா, தவறா? என்று விசாரித்து அறிய வேண்டும். ஒவ்வொரு நபரும் தனது சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பத்தைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு.
அவர்களது ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை செய்தியாக வெளியிடக்கூடாது என்று ஆர்.ராஜகோபாலன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.
இந்தநிலையில், முதல்வர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் இதழில் வெளியான செய்தியைப் பற்றி தீர விசாரிக்காமல், பொய்யான, விஷமத்தனமான, களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிட்ட இந்து' பத்திரிகை ஆசிரியர் மற்றும் நிருபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications