இரும்புத்தாது, நிலக்கரிக்கான ராயல்டியில் மத்திய அரசு வஞ்சம்-ஒரிசா புகார்
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்திலிருந்து மத்திய அரசால் வெட்டி எடுக்கப்படும் இரும்புத்தாது மற்றும் நிலக்கரிக்கு உரிய ராயல்டி தொகையை மத்திய அரசு கொடுக்க மறுப்பதாக அம்மாநில ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.
ஒரிசா மாநிலத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியில் ஒரு டன்னுக்கு ரூ75 மட்டுமே தற்போது ராயல்டி வழங்கப்படுகிறது. இதை ரூ176 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது பிஜூ ஜனதா தளத்தின் கோரிக்கை.
நாட்டின் மொத்த அளவில் ஒரிசாவிலிருந்து 96 சவீதம் குரோமேட் தாது, 92 சதவீதம் நைக்கேல் தாது, 65 சதவீதம் கிராபைட், 67 சதவீதம் பாக்சைட், 31 சதவீதம் தாது மணல், 24 சதவீதம் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
ஒரிசாவின் உண்மை முகம்
"என்ன வளம் இல்லை இத்திருநாட்டில்" என்பதைப் போல் இத்தனை வளம் கொண்ட ஒரிசாவில்தான் மின்சாரத்தை கண்ணால்கூட பார்க்காத பல ஆயிரம் பழங்குடி கிராமங்கள் இருக்கின்றன. வெளி மனிதர்களைக் கண்டாலே தலைதெறித்து ஓடி பதுங்கிக் கொள்கிற 60-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் இருக்கின்றனர். இவர்களில் 18 இனங்கள் திராவிடப் பழங்குடிகள். ஒரிசாவின் பழங்குடி கிராமங்கள் பெரும்பாலானவை இப்போது மாவோயிஸ்டுகளின் கோட்டை.
தமிழ்நாட்டிலும் நெய்வேலி நிலக்கரிக்கும் நரிமணத்து பெட்ரோலுக்கும் கூடுதல் கொடுக்க கோரி போராட்டங்கள் நடந்த காலம் உண்டு. மலைகளையே கொண்ட அசாமில் அரிய பொக்கிஷமாக கிடைத்த பெட்ரோலிய வளத்துக்கு கூடுதல் ராயல்டி கோரி பிறந்ததுதான் பிரிவினை இயக்கமான உல்பா என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications