புதுவை-பெங்களூர் சாலையை சீரமைக்க ரூ.624.2 கோடி நிதி ஒதுக்கீடு

புதுச்சேரி-பெங்களூர் இடையே உள்ள திண்டிவனம், செஞ்சி திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.66 வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கி்ன்றன. இது தவிர புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூர், ஓசூர், மும்பை செல்லும் வாகனங்களும் இந்த சாலையைத் தான் பயன்படுத்துகின்றன. இந்த சாலை புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை 4 வழிச்சாலையாகவும், அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை 2 வழிப் பாதையாகவும் உள்ளது.
திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை உள்ள இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது என்பதால் அதை சீரமைக்குமாறு கடந்த சில ஆண்டுகளாகவே பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இது குறித்த மனுவை திருவண்ணாமலை எம்.பி. த.வேணுகோபால் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் கமல்நாத்திடம் கொடுத்தார்.
இதையடுத்து திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரையுள்ள 182 கி.மீ. தூர சாலையை சர்வதேச தரத்தில் போட ரூ.624.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்குகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, மாத்தூர், கன்னடஹள்ளி ஆகிய ஊர்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் திட்ட இயக்குநர் வரதராஜன் கூறியதாவது,
இந்த சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். சாலைகள் அமைக்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி விரைவில் முடிந்துவிடும். வரும் பிப்ரவரி மாதத்தில் சாலை போடும் பணிகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்.
9 புறவழிச்சாலைகள் அமைப்படுகின்றது. இதனால் எந்த ஊரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. தற்போது குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றது என்றார்.
தற்போது திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை நகருக்குள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. புதியதாக அமைக்கப்படும் புறவழிச்சாலை திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் இருந்து நல்லவன்பாளையம் வழியாக அத்தியந்தல் கிராமத்தில் முடியும் வகையில் அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications