குடியரசு தினம்-டெல்லியில் கொடியேற்றினார் பிரதீபா பாட்டீல்-கண்கவர் அணிவகுப்பு!

முன்னதாக இன்று காலை அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மலர் வளையம் வைத்து மறைந்த படையினருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விழா நடந்த ராஜ்பாத்திற்கு வந்து சேர்ந்தார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வந்து சேர்ந்தார். அவருடன் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான இந்தோனேசியாவின் முதல் பெண் பிரதமரான இன்லுக் ஷினாவாத்ராவும் உடன் வந்தார்.
இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். அதன் பின்னர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அசோக் சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. அசோக் சக்ரா விருது, வீர மரணம் எய்திய லெப்டினென்ட் நவ்தீப் சிங்குக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலின்போது தனது உயிரை நீத்தவர் நவ்தீப் சிங். மரணத்திற்கு முன்பு நான்கு தீவிரவாதிகளை வேட்டையாடியவர் நவ்தீப் சிங்.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் அணிவகுப்பு தொடங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் வி்மானப்படை ஆகிய முப்படைகளின் அணிவகுப்பு முதலில் நடைபெற்றது. இந்தியாவின் படை பலத்தை பறை சாற்றும் ஆயுத அணிவகுப்பும் இடம் பெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications