நிலத் தகராறு: பங்காளி வீட்டுக்கு மனித வெடிகுண்டாக சென்ற சீனர்-5 பேர் பலி!
பீஜிங்: சீனாவில் தனது சகோதரர் முறை வரும் நபரின் வீட்டுக்குள் புகுந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
சீனாவின் ஹ்யூனன் மாகாணத்தில் உள்ளது டீலூ என்ற கிராமம். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணி அளவில் லியாவ் என்றவர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தனது பங்காளி வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது பங்காளி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் சீன புத்தாண்டையொட்டி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது லியாவ் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் லியாவ் உள்பட அனைவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். லியாவ் பல ஆண்டுகளாக ஒரு நகரில் பணிபுரிந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் கிராமத்திற்கு வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
சீனாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடப்பது அரிது. இந்நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications