அடக் கடவுளே... மாடு ஏற்றி வந்த லாரியை மறித்து வழிப்பறி செய்த இந்து முன்னணி நிர்வாகிகள்!
முசிறி: முசிறியில் மாடுகளை ஏற்றி வந்த லாரியை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த தீபகம்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிமணி (42). அவர் முசிறி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
நான் மாடுகள் வாங்கி சந்தையில் விற்கும் தொழில் செய்து வருகிறேன். பொள்ளாச்சி சந்தையில் வாங்கிய மாடுகளை விற்பனை செய்ய பெரம்பலூரில் இருந்து துறையூர் வழியாக முசிறிக்கு வந்து கொண்டிருந்தேன்.
அப்போது முசிறி திருமுருகன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே முசிறியைச் சேர்ந்த இந்து முன்னணி புறநகர் மாவட்டச் செயலாளர் நீலமேகம் (35), துலையாநத்தம் உறுப்பினர் திருப்பதி, முசிறி ஒன்றியச் செயலாளர் தேவராஜ் (32) ஆகியோர் லாரியை வழி மறித்து லாரியில் மாடுகளை ஏற்றி வந்தது தவறு என்றும், ரூ.2,000 பணம் கொடுக்காவிட்டால் வாகனத்தை காவ்ல நிலையத்தில் ஒப்படைத்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டினர். பின்னர் ரூ.2,000 பணத்தை எங்களிடம் இருந்து பறித்துச் சென்றனர். எனவே, அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணி நிர்வாகிகள் நீலமேகம் (35), துலையாநத்தம் திருப்பதி, தேவராஜ் (32) ஆகிய 3 பேரை கைது செய்தார்.


Click it and Unblock the Notifications
