பித்தளை சிலைகளை ஐம்பொன் என்று கூறி விற்க முயன்ற 4 பேர் கைது
சுரண்டை: சுரண்டை அருகே பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலைகள் என்று கூறி அதை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயன்ற ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுரண்டை அருகேயுள்ள கம்பிளியைச் சேர்ந்தவர் சுப்பு. அவரது மகன் பிச்சையா. மெக்கானிக். அவரிடம் 4 பேர் தங்களிடம் விலை உயர்ந்த காமாட்சியம்மன், பூமாதேவி ஆகிய ஐம்பொன் சிலைகள் உள்ளன. இதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் சகல ஐஸவர்யங்களும் கிடைக்கும் என்று கூறி 2 சிலைகளுக்கும் ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் சாம்பவர் வடகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஏட்டு செல்வகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கொண்டு வந்த இரு சிலைகளும் பித்தளையில் செய்யப்பட்டவை என்றும் அதன் மதிப்பு ரூ.20,000 என்றும், அவர்கள் சங்குளம் மெயின்ரோடு பால்ராஜ் மகன் ஆட்டோ டிரைவர் தங்கராஜ், மேக்கரை சிவசுப்புரமணியன், வேலாயுதபுரம் ஆறுமுகச்சாமி, மீனாட்சிபுரம் சாமிராஜ் மகன் திருமலைச்சாமி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அந்த 2 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications