ரூ.152 கோடியில் புறவழிச் சாலைகள்: நிலங்களை கையகப்படுத்த ஜெயலலிதா உத்தரவு

152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகவும், நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும் பாலமாகவும் சாலைக் கட்டமைப்பு விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளின் உறுதித் தன்மை அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக விரைவிலேயே பழுதடைவதை களையும் விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்தினை சீரமைக்கும் விதத்திலும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் வண்ணமும், 152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள, 6 கிமீ நீளமுள்ள தென்காசி நகர் புறவழிச்சாலைக்கு 9 கோடியே 70 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், 6.89 கிமீ. நீளமுள்ள சங்கரன் கோவில் நகர் புறவழிச்சாலைக்கு 17 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயும், 7கிமீ. நீளமுள்ள அம்பாசமுத்திரம் நகர்புற வழிச்சாலைக்கு 19 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்,
4 கிமீ. நீளமுள்ள முதுகுளத்தூர் நகர் புறவழிச்சாலைக்கு 5 கோடியே 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும், 11 கிமீ நீளமுள்ள பவானி நகர் புறவழிச்சாலைக்கு 5 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயும், 22.66 கிமீ. நீளமுள்ள நாமக்கல் நகர் புறவழிச்சாலைக்கு 7 கோடியே 78 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும்,
13.60 கிமீ. நீளமுள்ள திருச்செங்கோடு நகர் புறவழிச்சாலைக்கு 4 கோடியே 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும், 19.50 கிமீ. நீளமுள்ள கடலூர் நகர் புறவழிச்சாலைக்கு 27 கோடியே 72 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயும், 2.80 கிமீ. நீளமுள்ள ஆற்காடு நகர் புறவழிச் சாலைக்கு 1 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயும், 11 கிமீ நீளமுள்ள திருப்பத்தூர் நகர் புறவழிச்சாலைக்கு 6 கோடியே 19 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், 8.20 கிமீ. நீளமுள்ள திருவண்ணாமலை நகர்புற வழிச்சாலைக்கு 6 கோடியே 23 லட்சம் ரூபாயும்,
பிற செலவினங்களுக்காக 41 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயும் என 11 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப் படுத்துவதற்காக 152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இப்பணிகளினால், நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக குறைவதுடன், பயணிகளின் பயண நேரம் மற்றும் விபத்துகள் பெருமளவு குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications