கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்:ஆதரவு இயக்க தலைவர் வலியுறுத்தல்
நெல்லை: நாட்டில் நிலவி வரும் மின்தட்டுபாட்டை போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணு மின் நிலைய ஆதரவு இயக்க தலைவர் விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்திய-ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தின்படி நாட்டின் வளர்ச்சிக்கு மின் தட்டுபாட்டை போக்க பாதுகாப்பாகவும், நவீன தொழில்நுட்பத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அணு உலையை மூட வலியுறுத்தி எதிர்ப்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் களம் இறங்கி நிற்பது வேதனைப்படக்கூடிய ஒன்று.
அணு உலைகளால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதித்துவிடும் என்ற பொய்யான தகவலை எதிர்ப்பாளர்கள் பரப்பி வருகின்றனர். இந்தியாவில் 20 அணு உலைகள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சென்னை கல்பாக்கம் அணு உலை கட்டப்பட்டு இதுவரை எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கலாம். அணுக் கழிவுகளை அதிவேக ஈணுலைகள் மூலமாக மறுசுழற்சி செய்து மின்சாரம் தயாரிப்பதால் கூடங்குளம் அணு உலைக் கழிவு தவிர்க்கப்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் காலம் கடத்தாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications