சென்னை வங்கிக் கொள்ளை- 3 கொள்ளையர்களின் வரைபடங்கள் வெளியீடு
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கியில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்களின் கம்ப்யூட்டர் வரைபடத்தை போலீஸார் வெளியிட்டு அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மொத்தம் நான்கு பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வட மாநில கட்டுமானத் தொழிலாளர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கியில் கொள்ளையடித்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் கூறிய அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டர் உதவியுடன் 3 பேரின் வரைபடங்களை போலீஸார் தயாரித்துள்ளனர். இவற்றை இன்று காவல்துறை வெளியிட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் இதைப் பிரதிகள் எடுத்து ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஒட்டியுள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் குறித்த அடையாளம், தகவல் தெரிந்தோர் 9884203821 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என போலீஸார் அறிவித்துள்ளனர்.
தகவல் தெரிவிப்போரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
4 ஊழியர்கள் மாயம்-கொள்ளையர்களா?
இதற்கிடையே துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களைக் காணவில்லை என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் கொள்ளைச் சம்பவம் நடந்த நாளிலிருந்து காணவில்லை என்று துரைப்பாக்கம் போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கும் கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications