ஏடி அண்ட் டி தொலைபேசி நிறுவனம் 3 மாதங்களில் ரூ. 34,000 கோடி நஷ்டம்!
Subscribe to Oneindia Tamil

இந்த நிதியாண்டில் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரித்திருந்தாலும், மொத்தத்தில் அது ரூ. 34,000 கோடி நஷ்டத்தை ஈட்டியுள்ளது.
உலகெங்கும் ஐபோன் சேவையில் முதலிடத்தில் உள்ளது இந்த நிறுவனம், கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 80,000 லட்சம் ஐபோன்களை விற்று அவற்றை தனது சேவைக்குள் கொண்டு வந்தது இந்த நிறுவனம். அதாவது உலகில் விற்பனையாகும் 5 ஐபோன்களில் ஒன்று ஏடி அண்ட் டியின் தொலைத் தொடர்பு சேவையைத் தான் பயன்படுத்துகின்றன.
கடந்த ஆண்டு இதே நிதியாண்டில் ரூ. 10,000 கோடி லாபம் ஈட்டிய இந்த நிறுவனம், இந்த ஆண்டு அதைப் போல மூன்று மடங்குக்கும் அதிகமான நஷ்டத்தை அடைந்துள்ளது.
அதிகளவிலான ஐபோன் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பிற நிறுவனங்களுடன் போட்டி போட்டிக் கொண்டு, கட்டணத்தை மிகவும் குறைத்ததே இந்த நஷ்டத்துக்குக் காரணமாகும்.












Click it and Unblock the Notifications