ஆண்ட்ராய்ட்-ஐபோன்களால் பின் தள்ளப்பட்ட நோக்கியா: நஷ்டம் ரூ.5,000 கோடி
Subscribe to Oneindia Tamil

இந்த நிறுவனத்தின் செல்போன் விற்பனையும் 21 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ. 63,000 கோடியளவுக்கு வருவாய் ஈட்டியது இந்த நிறுவனம். அதே போல சுமார் ரூ. 4,000 கோடியளவுக்கு லாபமும் ஈட்டியது.
ஆனால், இந்த ஆண்டு வருமானம் ரூ. 50,000 கோடியாக சரிந்துவிட்டது. அதே போல லாபமும் சரிந்து ரூ. 4,000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
உலகளவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் சக்கை போடு போட ஆரம்பித்துள்ள நிலையில், நோக்கியா செல்போன்களின் விற்பனை சரிந்து வருகிறது.
இதை சமாளிக்க விண்டோஸ் அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை களத்தில் இறக்கி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் விண்டோஸ் போன்களை ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் விற்றுள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications