மாநகராட்சிக் கூட்டத்தில் அமளி- திமுக உறுப்பினர் முகத்தில் குத்து விட்ட அதிமுக பெண் கவுன்சிலர்
சென்னை: சென்னை மாநகராட்சி மன்றத்தில் இன்று அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுக பெண் உறுப்பினர், திமுக உறுப்பினரின் முகத்தில் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியதும் சென்னையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மேயர் துரைசாமி விவரித்தார். விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.
இது தொடர்பாக பேசிய 97வது வார்டு திமுக உறுப்பினர் வாசு, அனுமதி மீறி தொடர்ந்தும் கட்டிடங்கள் கட்டப்படுகிறது என்றார். இத்தகைய கட்டிடங்களை தொடக்க நிலையிலேயே மாநகராட்சி தடுத்து நிறுத்தும் என்று மேயர் பதிலளித்தார். தொடர்ந்தும் திமுக உறுப்பினர் வாசு பேசினார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன்றத்தில் அமளி ஏற்பட்டது. இந்த அமளியின் போது வாசுவை அதிமுக உறுப்பினர் அஞ்சுலெட்சுமி முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி மாமன்றக் கூட்டத்தில் இருந்து திமுகவினர் வெளியிடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications