ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்-வங்கிக் கொள்ளை நடந்த துரைப்பாக்கத்திற்கு ஏசி ஆனார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்த டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துரைப்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இடம் பெற்றிருந்தவர் பாலசுப்பிரமணியம். டி.எஸ்.பியான இவர் தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
துரைப்பாக்கம் உதவி ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் துரைப்பாக்கத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் துணிகரமான முறையில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் படையில் இடம் பெற்றிருந்த டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் இங்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் பாதுகாப்புப் படை டிஎஸ்பியாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் எஸ்.பியும் மாற்றம்
இதேபோல சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோட்னிஸ் அஸ்வின் முகுந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புனித தாமஸ் மலை காவல் துணை ஆணையராக ஏ.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி. எஸ்.பியாக எம்.எஸ். முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளர் மாற்றம்
இதேபோல வருவாய்த்துறை செயலாளராக இருந்து வந்த ராஜகோபால் மாற்றப்பட்டு உள்துறைச் செயலாளராகியுள்ளார்.
இதுவரை உள்துறைச் செயலாளராக இருந்து வந்த ரமேஷ் ராம் மிஸ்ரா வருவாய்த்துறைக்குச் செயலாளராகியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications