பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண் !
மேட்டுப்பாளையம் : பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று சரண் அடைந்தனர்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், கடந்த 10 -ந் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12 -ந்தேதி அன்று நெல்லை மாவட்டம் இடையர்தவணையை சேர்ந்த ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராஜபாளையம் அருகே உள்ள மூகவூரைச் சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி, மற்றும் பிரபு ஆகிய இருவரும் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதனையடுத்து அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நான்கு பேர் சரண் அடைந்த நிலையிலும் பசுபதிபாண்டின் கொலை வழக்கில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்ந்தபாடு இல்லை என்று பரவலான தகவல்கள் உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications