ராணுவ தளபதியின் பிறந்த ஆண்டைத் திருத்த மத்திய அரசு உத்தரவு-மோதல் வலுக்கிறது
டெல்லி: ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கின் பிறந்த ஆண்டை 1950 என்று திருத்தம் செய்யுமாறு ராணுவ தலைமை அலுவலகத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத் தளபதியுடன் சமரசமாகப் போவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் ஊதியம், ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை துணை ராணுவ தளபதி அலுவலகம் பராமரிக்கிறது. வீரர்களின் பணித் தகுதி, பதவி உயர்வு ஆகியவை தொடர்பான ஆவணங்களை ராணுவ செயலகப் பிரிவு பராமரிக்கிறது. இந்த இரண்டு அலுவலகங்களிலும் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் பிறந்த தேதியில் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. துணை ராணுவ தளபதி அலுவலக ஆவணத்தில் அவர் 1951-ல் பிறந்தார் என்றும் ராணுவ செயலகப் பிரிவு ஆவணத்தில் 1950-ல் பிறந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால் அவருடன் சுமுகமாகச் செல்வதை மத்திய அரசு விரும்பவில்லை. இந்தப் பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் அரசு இப்போது தயாராகி வருகிறது.
இதற்காக துணை ராணுவ தளபதி அலுவலக ஆவணங்களில் தலைமைத் தளபதியின் பிறந்த ஆண்டை 1950 ஆக திருத்தம் செய்யுமாறு அந்த அலுவலகத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையிலேயே, தளபதியின் பிறந்த ஆண்டை 1950 ஆக திருத்துமாறு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், துணை ராணுவ தளபதி அலுவலகம் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
தளபதியின் பள்ளிச் சான்றிதழில் அவரது பிறந்த ஆண்டு 1951 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையும் அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ராணுவ அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், இதே விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதனால் வி.கே.சிங்குடன் சமரசமாகப் போவதில்லை என்று மத்திய அரசு உறுதியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications