சட்டசபையில் அமளி துமளி - 'கேப்டன்' டிவியில் விஜயகாந்த் சோகப் பாட்டு!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று அதிமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும், வெளியேற்றமும், முதல்வர் ஜெயலலிதா விஜயகாநத்தைப் பார்த்து கடும் சவாலும்
விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் டிவியில் விஜயகாந்த் நடித்த படங்களிலிருந்து சோகப் பாட்டுக்களைப் போட்டுக் கொண்டிருந்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையே முதல் முறையாக மோதல் வெடித்தது. கடும் வாக்குவாதங்கள், கைகளை நீட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பேசுவது, சவால் விடுவது
என பல சம்பவங்கள் இன்று ஒரே நாளில் அரங்கேறின.
இதற்கு முத்தாய்பப்பாக விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். மேலும் திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் தனித்துப்
போட்டியிடுங்கள் பார்ப்போம் என்று விஜயகாந்த்தைப் பார்தது நேருக்கு நேர் முதல்வர் ஜெயலலிதா சவால் விட்டுப் பேசினார்.
இப்படி ஒரே அமளி துமளியாக தேமுதிக வட்டாரமே கலகலத்துப் போயிருந்த நிலையில், கேப்டன் டிவியில் விஜயகாந்த் நடித்த படங்களிலிருந்து சோகப் பாட்டுக்களைப் போட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் 'கேப்டன் நேரம்'...!












Click it and Unblock the Notifications