கருணாநிதி தலைமையில் திமுக உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் முக்கிய விவாதம்

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள், வைக்கப்பட்ட விவாதங்களுக்கு நாளை பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவுள்ளது.
கூட்டத்திற்கு கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், தி.மு.க. அமைப்புகளுக்கான 14-வது பொதுத்தேர்தல், அமைப்பு முறை தொடர்பான சட்ட திட்டத் திருத்தங்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அதேசமயமம், அதிமுக, தேமுதிக இடையே மூண்டுள்ள புதிய யுத்தம் தொடர்பாக எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்தும் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று விஜயகாந்த்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக வெளிநடப்புச் செய்தது நினைவிருக்கலாம். எனவே விஜயகாந்த் குறித்து நிச்சயம் பேசப்பட்டதாக நம்பப்படுகிறது.
நேற்று விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்வது தவறு என்று சுட்டிக் காட்டியது நினைவிருக்கலாம். எனவே இது திமுகவினர் மத்தியில் ஒரு சின்ன பிளாஷ் லைட் அடித்துள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் அன்பழகன், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, பொன்முடி,வேலு, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications