சட்டசபையிலிருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்- தேமுதிக வெளிநடப்பு

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்த பிரச்னையை உரிமை மீறல் குழு விசாரிக்கும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புதன்கிழமை பிற்பகல் உரிமை மீறல் குழுக் கூட்டம் நடந்தது. சபையில், தேமுதிகவினர் நடந்து கொண்ட விதம் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனது நிலையைத் தெரிவிக்க உரிமை மீறல் குழுக் கூட்டத்துக்கு வியாழக்கிழமை வருமாறு விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்தபடி விஜயகாந்த் இக்கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து உரிமை மீறல் குழு சபாநாயகரிடம் தனது அறிக்கையை அளித்து. இதையடுத்து விஜயகாந்த் சட்டசபையின் மாண்பு, கண்ணியம் ஆகியவற்று களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவரை 10 நாட்ள் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து 10 நாட்கள் அவை நடவடிக்கைகளில் விஜயகாந்த் கலந்து கொள்ளக் கூடாது என்று சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார்
தேமுதிக கடும் எதிர்ப்பு -வெளிநடப்பு
இந்த தீர்ப்புக்கு தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் தீர்ப்பைக் கண்டித்து அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.












Click it and Unblock the Notifications