பரூக் மறைவு அனுசரிப்புக்கு முன்பே அரசு நிகழ்ச்சியில் சாண்டி பங்கேற்றதால் சர்ச்சை
திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் பரூக் மரைக்காயர் மறைவையொட்டி 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாநில முதல்வர் உம்மன்சாண்டி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில ஆளுநராக இருந்த பரூக் மரைக்காயர் கடந்த மாதம் 26ம் தேதி காலமானார். இதற்காக ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அதுவரை அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் கேரள அரசு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டடன.
இந்நிலையில் மாநில முதல்வர் உம்மன்சாண்டியும், அமைச்சர்களும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2 அரசு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் கனக்குன்னு அரண்மனை, நிஷாகந்தி அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர்கள் குஞ்சாலிக்குட்டி, முனீர், சிவகுமார் கலந்து கொண்டனர்.
7 நாள் தூக்கம் நேற்று மாலைதான் முடிந்தது. அதற்கு முன்பாக அரசு நிகழ்ச்சிகளை நடத்தி அதில் முதல்வர் உம்மன்சாண்டியும், அமைச்சர்களும் கலந்து கொண்டது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications