தடையை மீறி குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு போட்டுக் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

ஏழைகளின் ஊட்டி என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் தென்தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே, ஜூ்ன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை சீசன் களைகட்டும். இந்த 3 மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து மூலிகை கலந்து வரும் அருவி நீரில் நீராடிச் செல்வது வழக்கம்.
தமிழகத்தின் வடமாவட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து ஆயில் மசாஜ் எடுப்பது வழக்கம். மேலும் குற்றால சீசன் காலத்திலும், சபரிமலை சீசன் காலத்திலும் குற்றாலம் பேரூராட்சி பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க பல கோடி ரூபாய்க்கு ஏலம் போவதுண்டு.
அப்படி ஏலம் எடுக்கும் சிறு வியாபாரிகள் கடைகளில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை சாரம் சாரமாக விற்பனை செய்வர். ஆனால் கடந்த மாதம் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் குற்றாலம் பேரூரவி நீர் புனித நீர் என்பதால் அருவியில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானம் பிப்ரவரி 2ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பேரூராட்சி சார்பில் வியாபாரிகளை அழைத்துப் பேசாமல் அருவிக்கரை பகுதியில் மட்டும் போர்டு வைத்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 2ம் தேதியான இன்று அருவியில் நீராடும் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் சோப்பு, ஷாம்பு உபயோகித்துதான் குளித்த வண்ணம் உள்ளனர். கடைகளில் சோம்பு, ஷாம்பு, சீக்காய் போன்ற பொருட்களின் வியாபாரமும் நடந்த வண்ணம் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications