ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்குக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை வைக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகராட்சித் தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் தலைமையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேறியது.
அண்ணா திமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா பெயர்தான் பேருந்துகளுக்கும் கட்டிடங்களுக்கும் சூட்டப்படுவது வழக்கம். எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவது என்பது அரிதானது. எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தினால் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்படுவோமோ என்று அதிமுக தொண்டர்கள் அஞ்சியும் வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் கூட்ட அரங்கத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications