திருச்சி சிறையில் திவாகரனைப் பார்த்துப் பேசிய மச்சான்

திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி கஸ்தூரியின் தொகுப்பு வீடு மற்றும் மாமனார் மாணிக்கம் ஆகியோரின் வீடுகள் கடந்த நவம்பர் 28ம் தேதி சசிகலாவின் தம்பி திவாகரன் தூண்டுதலின் பேரில் இடிக்கப்பட்டதாக கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் தேடப்பட்டு வந்த திவாகரனை கடந்த 3ம் தேதி திருச்சி அருகே கைது செய்த போலீசார், அவரை திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்சியில் தனி அறையில் தனிமைச் சிறையாக வைக்கப்பட்டுள்ளார் திவாகரன். தன்னைப் பார்க்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று அவர் முதலில் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தன்னைப் பார்க்க யாரேனும் வந்தனரா என்று அவர் ஆவலுடன் அதிகாரிகளிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திவாகரனின் மச்சான் முகுந்தன் மற்றும் 2 பேர் வந்தனர். அவர்களை பார்த்த திவாகரன் சில நிமிடம் மட்டுமே பேசி விட்டுப் போய் விட்டாராம்.
வேறு யாரும் வரவில்லையா என்று அதிகாரிகளிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறாராம். தன்னைப் பார்க்க யாரேனும் வந்தால் அவர்களுக்கும் சிக்கல் வரலாம் என்பதால்தான் யாரும் வர வேண்டாம் என்று அவர் முதலில் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் அவர் யாரோ முக்கியமானவரை எதிர்பார்ப்பது போலத் தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications