கடலூர் கலெக்டர் கார் மேதி 2 பேர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
கடலூர்: கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ சென்ற கார் மோதி கட்டடத் தொழிலாளிகள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நேற்று மதியம் 2.30 மணிக்கு தனது காரில் ஆல்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், கலெக்டரின் காரும் நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கட்டடத் தொழிலாளிகள் பன்னீர்செல்வம், குணா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். காரின் முன் பகுதியின் இடது பக்கம் நொறுங்கியது. மேலும் கலெக்டரின் குழந்தை சாரு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
உடனே ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்த கலெக்டர் படுகாயமடைந்த கட்டடத் தொழிலாளர்களை தனது காரிலேயே ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்பு அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தனது குடும்பத்தினரை ஒரு ஆட்டோவில் தனது முகாம் அலுவலத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications