கணவர் மரணம்..சயனைட் உண்டு உயிர் நீத்த மனைவி: காதல் தம்பதியின் சோக முடிவு!
கோவை: மரணத்தில் கூட எங்களது காதலைப் பிரிக்க முடியாது என்பார்கள். அதை கோவையைச் சேர்ந்த ஒரு காதல் தம்பதி நிரூபித்துள்ளது. கணவர் மாரடைப்பால் இறந்த சோகத்தைத் தாங்க முடியாத அவரது மனைவி சயனைட் விஷம் சாப்பிட்டு உயிர் நீத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 42 வயதான இவர் நகைப் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இத்தம்பதி இரு வீட்டாரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமாகி 12 ஆண்டுளாகி விட்டன. குழந்தைகள் கிடையாது. கணவனும், மனைவியும் அப்படி ஒரு அன்னியோன்யமாக இருப்பார்களாம். இருவரும் பிரித்து யாருமே பார்த்ததில்லை. அப்படி எங்கு போனாலும் சேர்ந்தே போவார்கள்,வருவார்கள். ஒருவர் மீது ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் இருந்து வந்தனர்.
நேற்று காலையில் செந்தில்குமாருக்கு திடீரென நெஞ்சு வலித்துள்ளது. மனைவியிடம் அவர் நெஞ்சு வலிப்பதாக கூற பதறிப் போன கிருஷ்ணவேணி, உடனடியாக செந்தில்குமாரின் நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார். பின்னர் இருவருமாக சேர்ந்து செந்தில்குமாரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தில்குமாரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் கடும் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் கிருஷ்ணவேணி, மருத்துவமனையிலேயே அழுது புரண்டார். பின்னர் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணவேணி எழுந்து அங்கிருந்து வெளியேறினார். பின்னர் தலைவிரி கோலமாக வந்த அவர் தனது கணவர் உடல் மீ்து விழுந்து கதறியழுதார். சற்று நேரத்தில் மயக்கமாகி விட்டார்.
அவர் விஷம் சாப்பிட்டிருந்தது தெரிய வந்து உறவினர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கிருஷ்ணவேணியின் உயிர் பிரிந்து விட்டதாக கூறினர். இதனால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
காதலித்து மணம் புரிந்த கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் விஷம் சாப்பிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கிருஷ்ணவேணியின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications