ராமதாசின் சகோதரரிடம் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி

கடந்த 2006ம் ஆண்டு மே 8ம் தேதி இப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டின் அருகே வைத்து அ.தி.மு.க. பிரமுகரும் சண்முகத்தின் உதவியாளருமான முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ரோசணை காவல் நிலையத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது தம்பி சீனுவாசன்,கட்சியின் மாநில துணைத் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 6ம் தேதி கோபி (28) செந்தில்குமார் (25), பன்னீர் செல்வம்(31) நடராஜ் (32) ஜெயராஜ் (30) அனந்தகிருஷ்ணன் (25) குமரன் (37), இளஞ்செழியன் (32) ஆகிய 8 பேரை சி.பி.ஐ கைது செய்தது.
ஜனவரி 25ம் தேதி ராமதாசின் தம்பி சீனுவாசன், பா.ம.க. மாநில துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சீனுவாசனை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு செய்தது. ஆனால், அந்த தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சிபிஐ.
இந்த மனு நீதிபதி மதிவாணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீனுவாசனை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐக்கு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications