எங்களை மீறி அணு உலையை இயக்கவும் முடியாது, இயக்கவும் விடமாட்டோம்: உதயகுமார்
சென்னை: போராட்டக்காரர்களை மீறி கூடங்குளம் அணுஉலையை இயக்கவும் முடியாது, இயக்கவும் விடமாட்டோம் என்று மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விரிவான திட்ட அறிக்கை, தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை, இந்திய- ரஷ்ய அரசுகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள இழப்பீடு ஒப்பந்தம், கழிவு மேலாண்மை ஆகிய அடிப்படை விவரங்களைக் கூட மத்திய அரசின் நிபுணர் குழு எங்களுக்கு தரவில்லை. ஆனால் அணுஉலை பாதுகாப்பானது என்று மட்டும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் அது அமைத்த நிபுணர் குழு மீது தமிழக அரசு நம்பிக்கை இழந்துவிட்டது. அதனால் தான் மாநில அரசின் சார்பில் நிபுணர் குழு ஒன்றை அமைக்கப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த குழுவில் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இக்குழு கூடங்குளம் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும். எங்களை மீறி அணுமின் நிலையத்தை இயக்கவும் முடியாது, இயக்கவும் விடமாட்டோம்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமி்ழக அரசை வலியுறுத்தியும் வரும் 26ம் தேதி சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு நடத்தவிருக்கிறோம். மேலும், மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது.
இந்த மாநாட்டில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகின்றது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு நாங்கள் மதிப்பளிக்க விரும்பவில்லை என்றார்.
பேட்டியின்போது பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications