விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வேலியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சங்கர தாஸ் (28). கோலியனூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து வேலியம்பாக்கத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உட்கார்ந்திருந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர தாஸுக்கு கை விரல்கள் துண்டானது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த கொலை உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் காரணமாக நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications