For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிடுக்கிப் பிடி விசாரணையில் மயங்கிய ராவணன்...மருத்துவமனையில் அனுமதி!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: போலீஸ் காவலில் உள்ள சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் நேற்றிரவு சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மணல் குவாரி லைசென்ஸ் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்துவிட்டதாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தார். அந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ராவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய குற்றப் பிரிவு போலீஸார் ராவணனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையின்போது தனக்கு திடீரென்று மயக்கம் வருவதாக ராவணன் கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்கு பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பி.பி. அதிகரித்ததால் மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

English summary
A city magistrate on Monday granted custody of Sasikala’s relative Ravanan to the Central Crime Branch till February 8, even as a Coimbatore court denied bail to him. A special CCB team recently brought Ravanan from the Coimbatore to Chennai in connection with a Rs 1 crore cheating case registered against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X