ஏட்டய்யா கை ரொம்ப நீளம்...மாணவனிடம் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட்!
மதுரை: மாணவரிடம் லஞ்சம் வாங்கிய மதுரை அண்ணா நகர் காவல்நிலைய ஏட்டு சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
தமது பெண் நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிய அவனை மிரட்டி ரூ 1000 லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த தகவல் மதுரை மாநகர ஆணையாளர் கண்ணப்பனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு துணை ஆணையாளர் ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார். ஏட்டு சிவக்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மாணவனிடம் லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார் ஏட்டு சிவக்குமார்.
இதனையடுத்து, ஏட்டு சிவக்குமாரை சஸ்பென்ட் செய்து மதுரை காவல் ஆணையாளர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications