விருதுநகர் வந்த ஸ்டாலினுக்கு 'ஷாக்'-ஒன்றிய திமுக சேர்மன் அதிமுகவுக்குத் தாவினார்!
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க. சேர்மன் வாசுதேவன் அதிமுக-வில் ஐக்கியமானார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விருதுநகருக்கு வந்த நேரத்தில் இந்த தாவல் நடந்துள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க. சேர்மனாக இருப்பவர் வாசுதேவன். உள்ளாட்சி தேர்தலில் ஆத்திபட்டி கவுன்சிலராக சுயேச்சையாக வெற்றி பெற்றார். அதன் பின்பு, ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர், இவருக்கு மாற்றி வாக்களித்து வெற்றி பெறச் செய்ததால், இவர் மீது மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனால், இவருக்கு ஒன்றியக் குழு கூட்டத்தில் சரிவர ஒத்துழைப்புக் கொடுக்காதாதல், கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 3 தினங்களுக்கு முன்பு நடைபெற இருந்த ஒன்றியக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது,
கடந்த ஒருவார காலமாக தலைமறைவாக இருந்த வாசுதேவன், திடீரென முதலவர் ஜெயலிலதா தலைமையில் போயஸ் கார்டனில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
விருதுநகர் மாவட்டதிற்கு இளைஞர் பொறுப்பாளர் தேர்வுக்கு, நேர்காணல் நடத்த மு.க. ஸ்டாலின் சென்ற நிலையில் தி.மு.க. சேர்மேன் வாசுதேவன் அ.தி.மு.க.-வில் இணைந்தது தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications